பெண்ணிடம் நகை பறித்த குற்றத்திற்காக நீதிபதி குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்ணாடி புதூரில் பானுமதி என்பவர் வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்குள் கடந்த 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி அத்துமீறி நுழைந்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து பானுமதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
அதன்பின் திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் நடராஜ் என்பவரை பானுமதியின் நகையை திருடிய குற்றத்திற்காக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கானது குற்றவியல் இரண்டாவது நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் குற்றவாளியான நடராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.