புதுக்கோட்டையில் மனைவியை நண்பனுடன் சேர்ந்து கொன்று 3 வருடம் கணவன் நாடகமாடி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் சரண்யா. இவரும் அதே பகுதியை அடுத்த பள்ளத்திவிடுதியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் கடந்த 2005 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு குழந்தை மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகள் ஆகும்.
இவ்வாறு இருக்கையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனியாக பிரிந்து வாழத் தொடங்கினார். மேலும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தையும் அணுகினார். ஏற்கனவே பிரிந்து வந்த போது தனது ஒரு குழந்தையுடன் மட்டும் தனியாக வந்த சரண்யா. தனது மற்றொரு குழந்தையையும் தன்னிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றத்தில் கடந்த 2017ம் ஆண்டு கோரிக்கை விடுத்தார்.
இவரது கோரிக்கையை ஏற்று திங்கள் முதல் வெள்ளி மாலை வரை குழந்தை கணவரிடமும், சனி ஞாயிறு ஆகிய இரு தினங்களில் தாயாரிடமும் குழந்தை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து வாரம் தோறும் காவல் நிலையத்தில் வந்து ரமேஷ் குழந்தையை விட்டுச் செல்ல சரண்யா கூட்டிச் செல்வார். இவ்வாறு இருக்க வழக்கம்போல் தனது குழந்தையை 2017 ஜூலை 30 ஆம் தேதி கூப்பிட சென்ற சரண்யா வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது தந்தை குணசேகரன் காவல் நிலையத்தில் சரண்யாவை காணவில்லை என்று புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் ரகு என்பவர் மீது சந்தேகம் கொண்டு அவரை தேடினர். ஆனால் அவர் மலேசியாவிற்கு தப்பிச் செல்ல அவர் வரும் வரை காத்திருந்து கடந்த 13ஆம் தேதியன்று அவர் மலேசியாவில் இருந்து திரும்பி வந்ததும் சென்னை விமான நிலையத்திலேயே அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில்,
சரண்யாவின் கணவரும் கைது செய்யப்பட்ட நபரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், இருவரும் சேர்ந்து திட்டமிட்டு சரண்யா கழுத்தை நெரித்து திருச்சி அருகே உள்ள ஒரு காட்டுப்பகுதியில் புதைத்ததாகவும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து சரண்யாவின் கணவர் ரமேஷ் கைது செய்யப்பட்ட புதைத்த இடம் ரமேஷ் மூலமே அடையாளம் காட்டப்பட்டது.
அங்கே சரண்யாவின் உடல் எலும்புத் துண்டுகளும், நகை, செயின், புடவை உள்ளிட்டவை மண்ணில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து குற்றம் நிரூபிக்கப்பட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.