இயக்குனர் ராம்குமாருக்கு சிவகார்த்திகேயன் வாய்ப்பு கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். இவரை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியது தனுஷாக இருந்தாலும் தற்போது இவருடைய வளர்ச்சி அனைத்து நடிகர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கும் விதமாக உள்ளது.
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமார், தனுஷ்க்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாக கதை எழுதி வருகிறார். ஆனால், இவர் இன்னும் கதையை முடிக்காத காரணத்தினால் இப்போதைக்கு ராம்குமாரின் படத்தை தனுஷ் ஒதுக்கி வைத்துவிட்டார். இந்நிலையில், சிவகார்த்திகேயன், இயக்குனர் ராம்குமாருக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.