மகனை கொலை செய்த காதலனை காப்பாற்ற முயன்ற தாய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டிலுள்ள உள்ள ரெய்ம்ஸ் என்ற நகரில் கரோலின் என்ற பெண் வசித்து வருகிறார். அவருக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்பவம் நடந்த அன்று அவர் தனது புது காதலனான வண்ட்டல் என்பவருடன் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் வண்ட்டல் குழந்தையை தாக்கியதில் குழந்தைக்கு நினைவிழந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு கரோலின் அவசர உதவி குழுவை அழைத்து குழந்தை அபார்ட்மெண்டுக்கு செல்லும் படிக்கட்டில் இருந்து விழுந்து விட்டான். அதனால் அவன் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறான் என்ற கரோலின் மருத்துவக் குழுவிடம் கூறிவிட்டு அழைப்பில் இருப்பதை கவனிக்காமல் காதலனிடம் தொடர்ந்து பேசியபோது “நமக்குள் நடந்த விவாதங்களை நான் மறைத்து விட்டேன். இதையே நீயும் கூறிவிடு” என்று அவர் வண்ட்டலிடம் கூறிய வார்த்தைகள் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
இதனால் மருத்துவ குழு போலீசாருடன் வந்தபோது 3 வயது சிறுவன் நினைவிழந்து கிடந்துள்ளான். உடனே அவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு டாக்டர்கள் பரிசோதித்துள்ளனர். ஆனால் அந்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வண்ட்டல் என்பவரை அழைத்து போலீசார் விசாரித்த போது தான் அடித்ததில் குழந்தை இறந்து போனது என்று அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் நீதிபதி வண்ட்டலுக்கு குழந்தையை தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதை மறைத்த குற்றத்திற்காக கரோலினுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் தீர்ப்பளித்துள்ளார்.