ஆட்டோவில் 1 1/2 கிலோ கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரம் அருகில் சர்வீஸ் சாலையில் வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது தாம்பரம் நோக்கி சென்று கொண்டு இருந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் பயணம் செய்தவர்களிடம் அவர்கள் விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ஆட்டோவை சோதனை செய்துள்ளனர்.
அதன்பின் சோதனையில் ஓட்டுநர் சீட்டுக்கு கீழே பிளாஸ்டிக் கவர்களில் 1 1/2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவர்களை விசாரணை செய்த போது அவர்கள் கபிலன், மோகன் குமார், ஜான் லூக் மகினோட் என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆட்டோ மற்றும் 1 1/2கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.