Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30வருஷம் ஆன பில்டிங்…! இடித்து தரைமட்டம் ஆக்குங்க.. ஸ்டுடன்ஸ் நலனுக்காக கோவை பள்ளி நடவடிக்கை…!!

ஆனைமலை அருகே உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த 4 வகுப்பறைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

1,400 மாணவிகளும் 40 ஆசிரியர்களுடன்  செயல்படும் வி.ஆர்.டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோவை மாவட்டம்  ஆனைமலையில்  உள்ளது.  இந்த பள்ளியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வகுப்பறைகள் பழுதடைந்து காணப்பட்டதால் பள்ளி சார்பில்  4 வகுப்பறைகளையும் இடிக்குமாறு பொதுப்பணித்துறையிடம்  வேண்டுகோள் வைத்தனர்.

அதன் பேரில் மாவட்ட கலெக்டர் அந்த கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து  ஜேசிபி எந்திரத்தின் மூலம் நான்கு வகுப்பறைகளையும் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளி சார்பில் கூறுகையில் மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாகவும் அவ்விடத்தில் வேறு கட்டிடங்கள் கட்ட போவதாகவும் கூறினார்.

Categories

Tech |