தமிழக அரசுக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய பாஜகவின் ராதாரவி, கரு நாகராஜன் ஒரு மீட்டிங் வைத்தார். எவ்வளவு பெரிய கூட்டம், கடைசியில் தாமதமாக சென்றவர்களுக்கு என்ன கொடுத்தார் என்று கேளுங்கள் ? தயிர்சாதம், அதில் வளர்ந்தது தான் இந்த கட்சி. சும்மா இங்க பிரியாணிக்கும், சரக்கிற்கும் அலைகின்ற கூட்டம் கிடையாது, ஆனால் அதெல்லாம் அடிக்கத் தெரியாமல் இல்லை நாங்கள்.
நான் என்னை சொல்லுகின்றேன். எதையாவது புகார் கொடுக்க வேண்டுமென்றால் என்னை பற்றி புகார் அளியுங்கள். ஏனென்றால் நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன். நான் திராவிடத்தில்…. திமுகவில் 30 வருடம் குப்பை கொட்டினேன், அண்ணா திமுகவில் 18 வருடம் சிங்கமான தலைவியுடன் இருந்தவன் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…
ஒன்னே ஒன்னு சொல்கிறேன் சகோதரர் ஸ்டாலின் வந்து எனக்கு பிடிக்கும், ஏனென்றால் கலைஞர் குடும்பத்தில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வந்திருக்கிறார் என்றால் எனக்கு சந்தோஷம் எப்பவுமே…. அவர் நல்ல மனிதர் தான். கூட இருப்பவர்கள் தான் சரி இல்லை. ஏனென்றால் சகோதரர் அண்ணாமலையிடம் சொல்றேன்….
நீங்கள் தயவு செய்து ஸ்டாலினை பேசுவதை விட்ருங்க, ஏனென்றால் அவர் ஊழல் பண்ண மாட்டாரு, ஏனென்றால் 5 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர் அவர் ஊழல் பண்ணுவாரா? உண்மை தானே இதெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அவர் ஐந்து லட்சம் கோடிக்கு சொந்தக்காரர், அவர் பரிசுத்த ஆவியாக இருக்க வேண்டும் என்று இருப்பவர்களை கூட சம்பாதிக்க கூடாது என்று சொல்கிறார் என தெரிவித்தார்.