தர்மபுரி மாவட்டத்தில் 30 அடி ஆழ கிணற்றில் விழுந்த யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏழ குண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத முட்டை கிணறு ஒன்று உள்ளது. அங்கு அதிகாலை வந்த பெண் யானை ஒன்று தவறி கிணற்றில் விழுந்தது. யானையின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது 30 அடி ஆழக் கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் யானையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.