ஏரியில் ஏற்பட்ட விரிசலை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒக்கரை ஊராட்சியில் 250 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் இந்த ஏரி நிரம்பியது. சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு ஏறி நிரம்பியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் சுமார் 30 அடி நீளத்திற்கு ஒக்கரை ஏரியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.