Categories
தேசிய செய்திகள்

30 ஆண்டுகளில்…. அரிசி பற்றாக்குறை ஏற்படும்…. ஆய்வில் அதிர்ச்சி தகவல்…!!!

உலகிலேயே மிகப்பெரிய நெல் மகசூல் செய்யப்படும் நாடாக இந்தியா உள்ளது. இங்கு விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு நெல் கொள்முதல் அதிக அளவு செய்யப்படுகிறது. இந்தியாவில் விவசாயம் செய்யவில்லை என்றால் உலகளவில் அரிசி பற்றாக்குறை ஏற்படும். மேலும் இந்தியர்களின் பிரதான உணவாக அரிசி இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் வில்லியம்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் ஆய்வுக்குழு, காலநிலை மாற்றத்தால் தினசரி உண்ணும் அரிசி உள்ளிட்ட தானியங்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் நெல்விளைச்சலுக்கு தேவையான தட்பவெப்பநிலை, நீரின் அளவு ஆகியவை மாறுபடும். எனவே அரிசி உற்பத்தியை தக்க வைக்க செயல்திறன், உத்திகள் மாறும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |