துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் வேகமாக உருகி வருவதால் கடல் மட்டம் உயர்ந்து பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
வடதுருவ பகுதியான ஆர்டிக்கில் உள்ள பனிப்பாறைகள் இன்னும் முப்பது ஆண்டுகளுக்குள் முழுகி மறைந்து விடும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உலக வெப்பமயமாதல் அதிகரிப்பால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. தற்போது பனிப்பாறைகள் உருவாவதை விட, உருகும் வேகம் அதிகரித்து வருகிறது.
அதனால் 2050ஆம் ஆண்டு உலகில் பனிப்பாறைகள் இல்லாமலே போகலாம். அவ்வாறு பனிப்பாறைகள் உருகுவதால் கடல்மட்டம் மேலும் உயர்ந்து நீரின் அளவு அதிகரிக்கும். அதனால் பல பகுதிகள் மூழ்கும் ஆபத்து உள்ளது. இதனைத் தடுப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் நாளுக்கு நாள் பனிப்பாறைகள் உருகி கொண்டே வருவதால் சற்று அச்சம் ஏற்பட்டுள்ளது.