உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்திருப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இன்று(14.12.22) காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் உள்ள தர்பார் ஹாலில் உதயநிதி பதவியேற்பார் என்றும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க 400 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் உதயநிதிக்கு எப்போது அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் விமர்சிக்கதான் செய்வார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுபற்றி பேசிய அவர், சேப்பாக்கம் தொகுதியில் செயல்பாடுகள் மூலம் தனது திறமையை உதயநிதி நிரூபித்துள்ளார். எனவே சரியான தருணத்தில் அவர் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். 30 ஆண்டுகள் கழித்து உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தாலும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கதான் செய்யும் என்றார்.