Categories
சென்னை மாவட்ட செய்திகள்

30 ஆண்டுகள் பழமையான கோவில்…. காணாமல் போன உற்சவர் சிலை…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன முருகர் சிலையை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள, காசிமேடு சூரிய நாராயண சாலையில் ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் உள்ளது. இந்த கோவில் 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. இந்த கோவிலை, அறங்காவலர் அலமேலு என்பவர் வழக்கம்போல் திறந்துள்ளார். அப்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை அருகிலிருந்த, பித்தளை மற்றும் செம்பு கலந்த உலோகத்தினாலான, முருகர் உற்சவர் சிலையை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து அலமேலு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் சிறிதும் தாமதமின்றி, இச்சம்பவம் குறித்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில்  அலமேலு புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பழங்கால சிலையை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |