திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாததால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ காங்கியனூர் கிராமத்தில் சொக்கலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பானுமதி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் தங்களைப் பாதுகாக்க பிள்ளைகள் இல்லை என்ற வேதனையில் சொக்கலிங்கம் கிராமத்தில் உள்ள கருப்புசாமி கோவில் அருகில் வயலுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிமருந்தை காதில் ஊற்றி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவ்வழியாக சென்றவர்கள் சிலர் சொக்கலிங்கத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சொக்கலிங்கம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.