திருவனந்தபுரத்தில் 30 ஆவது தென் மண்டல கவுன்சில் கூட்டம் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தொடங்கியது.
தென் மண்டலத்தில் உள்ள மாநிலங்களுக்கு இடையான நதிநீர் பங்கிட்டு விகாரங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்ற பல்வேறு அம்சங்களை தென்மண்டல கவுன்சில் கூட்டம் விவாதிப்பது வழக்கம். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பதியில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இது நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பங்கேற்க நேற்று தமிழகத்திலிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் கவுன்சிலிங் நடக்கும் இடத்திற்கு கேரளாவுக்கு சென்று விட்டார். அதனைத்தொடர்ந்து கேரளா முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து இரு மாநிலங்களுக்கும் இடையான நதிநீர் பங்கீட்டு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்..
இந்நிலையில் தற்போது கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், கேரளா முதல்வர் பினராய் விஜயன், ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இதில், நதிநீர் பங்கீடு, பெண்கள் பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு, மாநிலங்களின் எல்லையோர விவகாரம் உள் கட்டமைப்பு வசதிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது.