Categories
மாநில செய்திகள்

30 கிராம மக்கள் செல்பி எடுக்க தடை…. அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் செல்பி எடுக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, கடந்து செல்ல கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை வாலாஜா தடுப்பணைக்கு பொண்ணை மற்றும் பாலாற்றில் இருந்து நீர் வரத்து தற்போது 1,05,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. அதனால் கரையோரம் வசிக்கும் 30 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரும் மேற்கண்ட அறிவிப்புகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |