Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

30 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பேக்கரி, கடை, ஹோட்டல்களில் மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் தலைமையில் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் பயன்படுத்திய 300 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடை உரிமையாளர்களிடமிருந்து 3,200 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதனையடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் விற்பனை செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Categories

Tech |