Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

30 குண்டுகள் முழங்க மரியாதை…. முக்கிய அதிகாரிகள் அஞ்சலி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

நெல்லையில் காவல் துறையில் பணியாற்றி வந்த மோப்ப நாய் இறந்ததால் அதற்கு குண்டுகள் முழங்கி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர காவல்துறையில் பிராவோ என்ற பெயருடைய மோப்பநாய் பணிபுரிந்து வந்தது. இது வெடிகுண்டை தடுக்கும் பிரிவில் இருந்தது. இந்நிலையில் பிராவோ திடீரென்று வயது மூப்பின் காரணமாக இறந்தது. இதனால் அந்த நாயை காவல்துறை மரியாதையுடன் அடக்கம் செய்தனர்.

இதில் திருநெல்வேலி மாநகரத்தின் காவல்துறை துணை கமிஷனரான மகேஷ் குமார் மற்றும் சீனிவாசன் கலந்து கொண்டனர். மேலும் பிராவோவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்கள். அதன்பின் 30 குண்டுகள் முழங்கி உரிய மரியாதை செலுத்தி அதனை அடக்கம் செய்தனர்.

Categories

Tech |