பிரதமர் நரேந்திர மோடி 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை சரியான நேரத்தில் காப்பாற்றியுள்ளார் என்று ஜேபி.நட்டா கூறியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் இரண்டு கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. அதன்பிறகு வாக்கு எண்ணிக்கை 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா தேர்தல் பிரசார பேரணி ஒன்றில் பேசிய போது, ” அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பாதிப்பு முறையாகக் கையாளவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டை தகுந்த நேரத்தில் காப்பாற்றியுள்ளார். ஒருபுறம் வளர்ச்சி, கல்வி மேம்பாடு, கல்லூரிகள் திறப்பு, சாலை கட்டமைப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பேணுவது போன்றவற்றை மேற்கொள்ளும் மக்கள் இருக்கிறார்கள். மறுபுறம் சட்ட மீறலில் ஈடுபட்டு வளர்ச்சியை நிறுத்தும் மக்கள் உள்ளார்கள். உங்களது விதியை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.