பாவூர்சத்திரம் அருகே சிமெண்டு ஏற்றி வந்த லாரி, கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் அருகே உள்ள சங்கர் நகரில் இருந்து சுமார் 30 டன் சிமெண்ட் மூட்டைகள் லாரி ஒன்று ஏற்றிவந்துள்ளது . இந்த லாரியை கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள சப்தம் குலத்தை சேர்ந்த லாலிசத்சின்32 வயதான மகன் அஜி ஓட்டி வந்துள்ளார். அந்த லாரி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நெல்லை – தென்காசி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது பாவூர்சத்திரம் அருகே உள்ள கால்வாயில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து உள்ளது. இதனைத் தொடர்ந்து லாரியில் இருந்த 30 டன் சிமெண்ட் முட்டைகளும் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது. டிரைவர் அஜி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.