தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கட்சி பெயரை பதிவு செய்வதற்கு 7 நாட்கள் அவகாசம் போதும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் அது குறித்து விளம்பரம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது 30 நாட்களில் கட்சி பெயர் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில் 30 நாட்கள் என்பதை தேர்தல் ஆணையம் 7 நாட்களாக குறைத்துள்ளது. தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் , அஸ்ஸாம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.