‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸ் வெளியான 30 நிமிடங்களுக்குள் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் வெளியானது ஒரே சமயத்தில் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அறிவழகன் இயக்கி அருண் விஜய் நடித்துள்ள இந்த ‘வெப் சீரிஸ்’, திரைப்படங்களை முறைகேடாக இணையத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் பற்றியது. தங்களை விமர்சிக்கும் தொடரை, அவர்களே வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் நேற்று இரவு சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.