30 பந்துகளில் 140 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடிய ஷாருக்கானுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர் ஷாருக்கான். இவர் சையத் முஷ்டாக் , விஜய் ஹசாரே டிராபி தொடரில் அதிரடியாக விளையாடி பெஸ்ட் பினிஷராக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்கா தொடரில் இவரை சேர்க்காதது குறித்து தேர்வு குழு தலைவர் சேத்தன் ஷர்மாவிடம் கேள்வி எழுப்பிய போது, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் மாற்று வீரராக மட்டுமே சேர்க்கப்பட்ட ஷாருக்கான் தற்போது இலங்கை தொடரில் அப்படி கூட அவரை சேர்க்கப்படவில்லை.
மேலும் இலங்கை அணித் தேர்வின்போது ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 194 ரன்கள் குவித்து அசத்திய நிலையில் 20 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்களும் அதில் அடங்கும். மேலும் இந்த பவுண்டரி மற்றும் சிக்ஸர் மூலம் மட்டுமே 140 ரன்கள் குவித்துள்ளார். ஆனாலும் இவரை இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக சுழற்பந்து வீச்சையும் கற்று வருகிறார்.
ஆனாலும் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெஸ்ட் பினிஷராக இருக்கும் இவருக்கு இந்திய அணியில் மிடில் வரிசை பலவீனம் தொடர்ந்து வருவதால் ஷாருக்கானுக்கு இந்த வாய்ப்பை கொடுக்கலாம் . ஆனால் தற்போது இலங்கை தொடரில் ஷாருக்கான் சேர்க்கப்படாதது மூலம் வருகிற அக்டோபரில் தொடங்கவுள்ள டி20 உலக கோப்பையில் ஷாருக்கானுக்கு இடம் கிடைக்காது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. இதில் பஞ்சாப் அணி ஷாருக்கானை 9 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது.