உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் பெரும் அவதி அடைந்தனர். பல உலக நாடுகள் இன்று கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாகவும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. கொரோனா தொடரின் முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமானது. அதையடுத்து தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தொற்று பரவல் குறைந்து வருகின்றது.
ஆனால் இந்த காலத்தில் 30 நேரத்துக்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்குகிறதாம். Oxfam என்ற நிறுவனம் ஆய்வில் உணவுத் துறை சார்ந்த கோடீஸ்வரர்களின் சொத்து ஒவ்வொரு இரண்டு நாளுக்கு நூறு கோடி அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்த கால நேரத்தில் சுமார் 10 லட்சம் மக்கள் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு கோடீஸ்வரர் 23 ஆண்டுகளில் சம்பாதித்ததை விட கொரோனா உருவான 24 மாத கால கட்டத்தில் அதிக அளவில் சம்பாதித்துள்ளனர் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.