Categories
ஆன்மிகம்

“30 மணி நேரம் காத்திருப்பு”…. புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு…. திருப்பதியில் குவியும் பக்தர்கள்….!!!!

திருப்பதி ஏழுமலையானுக்கு உகந்த மாதம் புரட்டாசி மாதம் ஆகும். இந்த மாதம் இன்று பிறந்தது. இந்த புரட்டாசி மாதத்தில் பெருமாளை தரிசனம் செய்தால் புண்ணியம் பெருகும் அதுமட்டுமல்லாமல் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் பெருமாளை தீவிரமாக வழிபடுபவர்கள் இந்த மாதம் முழுவதும் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக ஏழுமலையானின் தீவிர பக்தர்கள் புரட்டாசி மாதத்தில் ஒரு முறையாவது சாமியை தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பார்.  குறிப்பாக வரும் 27 -ந்தேதி முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது.

இந்த விழாவில் பெருமாளுக்கு உகந்த 3-ம் சனிக்கிழமை அன்று தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் மாட வீதிகளில் உலா வந்து மக்களுக்கு காட்சி தந்து அருள்புரிவார். கடந்த சில மாதங்களாக வெள்ளி ,சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இன்று புரட்டாசி மாதம் பிறந்ததால் நேற்று திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் கிட்டத்தட்ட 30 மணி நேரத்திற்கு மேலாக காத்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக நேற்று முன்தினம்  ஒருநாள் மட்டும் ரூ.5.59 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |