Categories
பல்சுவை

30 முறை தோல்வி…. சோதனைகளைத் தாண்டி சாதனை…. உலகை வென்ற ஜாக் மா….!!!

சீன நாட்டைச் சேர்ந்த ஜாக் மா என்ற தொழிலதிபர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம். இவர் உலகத்தில் உள்ள மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் 20-வது இடத்தில் இருக்கிறார். கடந்த 1964-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி சீனாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஜாக் மா கஷ்டத்தோடு வளர்ந்தார். இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 முறை தோல்வி அடைந்துள்ளார். இதேப்போன்று 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 முறை தோல்வி அடைந்துள்ளார். இதனால் பல கல்லூரிகள் ஜாக் மாவை சேர்ப்பதற்கு மறுத்துள்ளனர். இந்நிலையில் ஜாக் மா ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் படிப்பதற்கு 10 முறை விண்ணப்பித்துள்ளார். ஆனால் 10 முறையும் அவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதன் காரணமாக ஜாக் மா ஒரு சாதாரண கல்லூரியில் படித்துள்ளார். இவர் படிப்பு முடிந்தவுடன் பல கம்பெனிகளுக்கு வேலைத் தேடி சென்றுள்ளார்.

ஆனால் ஜாக்மாவை எந்தக் கம்பெனியிலும் வேலைக்கு சேர்த்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாக ஒரு ரெஸ்ட்டாரெண்டில் கிளீனர் வேலைக்கு சென்றுள்ளார். அந்த வேலைக்கு 23 பேர் சென்றிருந்தனர். அதில் 22 பேரை மட்டும் எடுத்துக்கொண்டு ஜாக் மாவை மட்டும் ரிஜக்ட் செய்து விட்டனர். இவர் வேலைத் தேடி சென்ற 30 நிறுவனங்களுமே ஜாக் மாவை ரிஜக்ட் செய்ததால், இனி யாரிடமும் வேலை தேடிச் செல்லக்கூடாது என ஜாக்மா முடிவு செய்துள்ளார். எனவே அலிபாபா என்ற ஒரு கம்பெனியில் ஜாக் மா தொடங்கினார். இந்த கம்பெனியை ஜாக்மா தொடங்கும் போது கூடிய விரைவில் கம்பெனியை மூடி விடுவார் என பலர் கூறியுள்ளனர். ஆனால் அதை எதையும் கண்டுகொள்ளாமல், ஜாக்மா தன்னுடைய கம்பெனிக்காக கடுமையாக உழைத்து அதை உலகத்தின் முக்கியமான மிகப் பெரிய கம்பெனிகளில் ஒன்றாக மாற்றி விட்டார்.

Categories

Tech |