உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 1200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கர்நாடகவில் இருந்து அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்த போது அந்த வேனில் 30 மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி இருத்துள்ளது.
இதனை பார்த்த அதிகாரிகள் வேனை ஒட்டி வந்த டிரைவரிடம் விசாரணை செய்ததில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த பக்ருதீன் என்பதும் வேப்பனப்பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசியை வாங்கி ஆந்திர மாநிலத்திற்கு கடத்தியதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் பக்ருதீனை கைது செய்ததோடு ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்தனர்.