வருகிற 30ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் பங்கேற்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்திற்கு வருகிற 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகின்றார். ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் 30ஆம் தேதி அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்கு சென்று தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக உயர் அதிகாரிகளுக்கு புதுடெல்லியில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது பற்றி அதிகாரப்பூர் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு இடையே முன்னதாக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்ற பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து வழங்கியுள்ளார்.
பிரதமர் மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடி கடந்த 5ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சி பிரமுகர்கள் போன்றவர்களை சந்தித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். அதனால் இந்து மதத்தில் மிக பற்று கொண்டுள்ள மோடி குடும்பத்தினர் இந்து மதத்தில் சிறந்த ஆன்மீகவாதியாக வாழ்ந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வருவதில் எந்தவிதமான ஆச்சரியமும் இருக்கப் போவதில்லை என கூறப்படுகிறது.