தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள 917 மையங்கள் அமைக்கப் பட்டிருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 30 ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு பள்ளிகள், சமுதாய நலக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்கள் என மாவட்டத்தில் 917 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி போடும் முகாம் நடைபெற்றது. தடுப்பூசி முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு தடுப்பூசி எடுத்துக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.