Categories
உலக செய்திகள்

30 வயதிற்கு குறைந்தவர்களா நீங்கள்..? இதற்கு தடை பிரிட்டனின் திடீர் முடிவு..!!

பிரிட்டனில் 30 வயதிற்கும் குறைவானவர்களுக்கு ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை செலுத்த வேண்டாம் என்று அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 

பிரிட்டனில் 70 ற்கும் அதிகமான நபர்கள் மற்றும் ஐரோப்பாவில் 120க்கும் அதிகமான நபர்களுக்கு  ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்திய பிறகு இரத்த உறைவு பிரச்சனைகள் போன்ற பக்க விளைவுகளால் பாதிப்படைந்துள்ளனர். இதனால் 30 வயதிற்கும் அதிகமாகவுள்ள நபர்களுக்கு வேறு நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது.

இதனால் ஐரோப்பாவின் மருந்துகள் சீரமைப்பு நிறுவனமான European Medicines Ajency (EMA)    பாதிப்படைந்தவர்களை சோதனை செய்துள்ளது. அதில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு இரண்டு வாரங்களில் இரத்த தட்டுக்கள் குறைவாக இணைந்து இரத்த உறைவு உண்டாக வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருக்கிறது.

மேலும் குறிப்பிட்ட வயது மற்றும் குறிப்பிட்ட பாலினத்தவர்களுக்கு தான் இந்த பாதிப்பு உண்டாகும் என்று தற்போது குறிப்பிட்டு கூற முடியவில்லை. மேலும் அதிகமாக 60 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு இந்த பக்க விளைவுகள் உண்டானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் அபாயம் இருப்பதை விட நன்மைகளும் மிகவும் அதிகமாக இருக்கதான் செய்கிறது. இதனால் அதனைத்தொடர்ந்து பயன்படுத்துவதற்கு பரிந்துரைப்பதாக EMA கூறியுள்ளது.

Categories

Tech |