Categories
உலக செய்திகள்

“30 வருடங்களாக இல்லாத அளவிற்கு மிகப்பெரிய ஸ்ட்ரைக்”… லட்சக்கணக்கான பயணிகள் சிரமம்….!!!!!!!

பிரிட்டனில் கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் 40,000 ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் ரயில் சேவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, பொருளாதார சரிவு, ரஷ்யா உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் உலக பொருளாதாரமே இன்று ஆட்டம் கண்டுள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பண வீக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 30 அல்லது 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் விலைவாசி உயர்வு கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் அதிக அளவில் பொது மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரிட்டனில் ஊதியம் பிரச்சனையில் சுமூக உடன்பாடு எட்டப்படாததால் 30 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வேலை நிறுத்த போராட்டத்தில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். அதாவது ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் முக்கிய ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. லண்டன் மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்கள்  பெரும்பாலும் மூடப்பட்டிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றார்கள். ரயில்வே ஊழியர்களின் போராட்டத்திற்கு 37 சதவீதம் பேர் ஆதரவும் 45 சதவிகிதம் பேர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இது பற்றி பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசும்போது பல வருடங்களாக இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார பாதிப்பு எதிர்கொண்டுள்ள பிரிட்டனுக்கு உதவ இன்னும் அதிகமாக செய்ய வேண்டி இருக்கிறது. இந்த சூழலில் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வது பலரின் வாழ்க்கையை பாதிக்கும். மேலும் அதிலிருந்து மீண்டு வரும் வர்க்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |