Categories
சினிமா தமிழ் சினிமா

30 வருடத்திற்குப் பின்னர் இளையராஜா….. ஹீரோவாக நடிக்கப் போவது யார் தெரியுமா?….!!!!

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் ரசிகர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான பாடல்களை பாடி வருகிறார். இவர் பாடகராகவும், இசையமைப்பாளராகவும், மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை, சிங்காரவேலன், பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவர் 30 வருடங்களுக்குப் பின் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பாலிவுட் இயக்குனர் பால்கி என்பவர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொன்னதாகவும், ரஜினிகாந்துக்கும் இந்த கதை பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை இளையராஜா தயாரிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வரவில்லை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |