Categories
உலக செய்திகள்

30 வருட சம்பளம் ஒரே நாளில்…. கூரையை பிய்த்து கொண்டு அடித்த அதிர்ஷ்டம்…. ஒரு கல்லால் மாறிப்போன வாழ்க்கை….!!

சவப்பெட்டி தயாரிப்பவர் ஒருவர் வீட்டின் கூரையை பிய்த்து கொண்டு பல பில்லியன் மதிப்புடைய விண்கல் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமத்ரா பகுதியில் வசித்து வருபவர் ஜோஸ்வா(33). குடும்பத்துடன் வசித்துவரும் இவர் சவப்பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் வீட்டின் கூரைப் பகுதியில் ஏதோ ஒரு பொருள் ஒன்று உடைந்து கீழே விழுவது போன்று சத்தம் கேட்டுள்ளது. அது என்னவென்று பார்க்க சென்றபோது ஒரு விண்கல் போன்று இருந்த அதை தொட்டபோது மிகவும் சூடாக இருந்துள்ளது. பின்பு அதை மண்வெட்டி கொண்டு வெளியில் எடுத்து பார்த்தபோது அது பல பில்லியன் மதிப்புள்ள விண்கல் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஜோஸ்வா கூறுகையில், “ஒரு நாள் திடீரென்று அதிகமான சத்தம் கேட்டது. அதில் பல வீடுகள் எல்லாம் குலுங்கின. நான் வீட்டை சுற்றி என்னவென்று தேடிய போது வீட்டின் கூரை  உடைந்து இருப்பதைக் கண்டேன். பின்னர் நான் கீழே பார்த்தபோது விண்கல் இருந்தது. உள்ளூர் நபர்கள் யாராவது கல்லை எறிந்து விட்டு சென்று விட்டார்கள் என்று நினைத்தேன்.

ஆனால் இது விண்கல் என்று மக்கள் பலர் கூறி வந்தனர்” என்று கூறியுள்ளார். அதன் பின்னர் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த விண்கல்லை அவரிடமிருந்து 1.4 மில்லியன் பவுண்ட் அதாவது அவருடைய 30 ஆண்டு சம்பளத்திற்கு சமமான பணத்தை கொடுத்து அமெரிக்காவின் விண்கல் நிபுணர் கொலின்ஸ் வாங்கி அமெரிக்காவுக்கு அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து விண்கல்லை இண்டியானாபோலிஸ் சேர்ந்த மருத்துவரும், விண்கல் சேகரிப்பாளருமான ஜெய் பியடெக் வாங்கினார் அமெரிக்காவின் சந்திர மற்றும் கிரக நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விண்கலமானது CM1/2 கார்பனேசிய சோன்ட்ரைட் வகை அரிதான விண்கல் என்று கூறப்படுகிறது. இந்த விண்கல்லின் உள்ளே அடர் சாம்பல் மற்றும் கருப்பு நிற சிறிய வெளிர் நிற புள்ளிகள் இருக்கின்றன. இது குறித்து தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி அமைப்பின் தலைவர் தாமஸ் ஜமாலுதீன் இது ஒரு பாறை விண்கல் என்றும், மேலும் ஒரு விண்கல் குடியிருப்பு பகுதியில் விழுவது என்பது ஒரு அதிசய நிகழ்வு என்றும் பிரபல ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |