1990 ஆம் ஆண்டு தமிழ் திரையுலக கனவுக்கன்னிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா. தெலுங்கு நடிகர் நாகார் ஜுனை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், பின் நடிக்கவில்லை. திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த அவர் 30 ஆண்டுகளுக்கு பின் “கணம்” என்ற திரைப்படத்தின் வாயிலாக மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அதாவது கதாநாயகன் சர்வானந்தின் அம்மாவாக அவர் நடிக்கிறார். இந்த திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்த அமலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அமலா பதிலளித்தார்.
30 ஆண்டுகளாக நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நீங்கள், தற்போது திடீர் பிரவேசம் செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் திருமணத்துக்குப் பிறகு நான் திரையுலகில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தாலும், வீட்டில் சும்மா இருக்கவில்லை. பல சமூகசேவைகளில் ஈடுபட்டு பிஸி’யாகவே இருந்தேன். இப்படத்தின் கதையும், கதாபாத்திரமும் பிடித்து இருந்தது. இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் கதை சொன்ன விதம் பிடித்தது. இதனால் நடிக்க சம்மதித்தேன். இது என் திரையுலக பயணத்தில் மறக்கமுடியாத படமாக இருக்கும்.