ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனா நோய் தொற்று குறித்து அச்சமோ, விழிப்புணர்வோ இன்றி புனித நீராடியதால் அதிக பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கும்பமேளா இந்து சமயத்தினரால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நான்கு இடங்களில் உள்ள ஊர்களில் ஆற்றுப்படுகையில் நடைபெற்று வருகிறது. அதில் உத்தரகாண்டில் ஹரித்வாரில் வெகு விமர்சனமாக நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழாவில் அதிக அளவில் நோய்தொற்று பரவி நோய் பரப்பும் மையமாக திகழ்கிறது.
ஹரித்துவாரில் 670 ஹேக்டேர் பரப்பளவில் விரிந்து கிடக்கும் கும்பமேளா தளங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் நோய்த் தொற்றுக்கு இடம் கொடுத்துள்ளனர்.
ஹரித்வார் ஆற்றுப்படுகையில் புனித நீராடலுக்கு உகந்த முக்கிய நாளான சுவாதி அம்மாவாசை, மேஷ் சங்கராந்தி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சாமியார்கள், சாதுக்கள், பக்தர்கள் என 48 லட்சத்துக்கும் அதிகமானோர் புனித நீரில் நீராடி உள்ளனர். கொரோனா நோய்தொற்று கட்டுப்பாடுகளை மீறியதால் கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கட்டுக் கடங்காத கூட்டத்தில் மக்கள் கோரொனா விதிமுறைகளை பின்பற்றுவது உறுதி செய்வதற்கு பாதுகாப்பு படையினரால் முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் பெரும்பாலான சாமியார்கள் மற்றும் சாதுக்கள் கொரோனா பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்து பரிசோதனை செய்து கொள்ளவில்லை. அதன் விளைவாக அங்கு வரும் தொற்று அதிக அளவில் பரவியுள்ளது.
அங்கு பரிசோதனை செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குள் பொரோனோ 1,701 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கானோரின் முடிவுகள் ஓரிரு நாளில் வர உள்ளது. அதனால் நோய்த்தொற்று பாதித்தவர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என்று அச்சப்படுகின்றனர். அதன்பின் கும்பமேளாவில் பங்கேற்ற சாதுக்களில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்துள்ளனர்.
இன்னும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாமல் சாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அவர்களை பரிசோதனை செய்வதற்காக மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர். அந்த பரிசோதனையின் முடிவில் மேலும் பல சாதுக்களுக்கு தொற்று உறுதி செய்யப்படலாம் என கூறுகின்றனர்.