கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட ஜோடிகள் உதட்டோடு உதடாக முத்தமிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் அச்சம் சற்றும் குறையாத நிலையில், அதனுடைய மரபணுவில் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய வகை கொரோனா வைரஸாக உருமாறி இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
அதே போல் ரஷ்யாவிலும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக,யெகாடெரின்பர்க் என்ற பகுதியில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட ஜோடிகள் உதட்டோடு உதடாக முத்தமிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.