Categories
மாநில செய்திகள்

30 நாட்களில் 76 அமைச்சர்கள்…. தமிழகத்தில் பிரதமர் மோடி போட்ட பலே பிளான்…. சீக்ரெட்டை போட்டு உடைத்த அண்ணாமலை….!!!

சென்னை மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன? நேர்மையான முறையில் திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்று கண்டறிந்து வர பிரதமர் மோடி உத்தரவிட்டிருக்கிறார். இதற்காக 30 நாட்களில் 76 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகின்றனர். அதிலும் அடுத்த 20 நாட்களில் 50 அமைச்சர்கள் வருகை புரிந்து அனைத்து மாநிலங்களுக்கும் சென்று பார்வையிடுகின்றனர். தமிழகம் முழுவதும் 75 இடங்களில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தற்போது கோவையில் முகாமிட்டுள்ளார். அடுத்த கட்டமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்த வர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை நீங்கள் தேடிச் செல்ல வேண்டாம், அது உங்களை தேடிவரும். நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் முத்தான பல நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையும், அவர்கள் பயன் பெறவும் வழிகாட்டு முகாம் சென்னையில் 75 இடங்களில் தொடங்க உள்ளது. முதல் வழிகாட்டு முகாம் இன்று சென்னை மடிப்பாக்கத்தில் சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யன் அவர்களின் ஏற்பாட்டில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் முன்னிலையில், தமிழக பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய பியூஸ் கோயல் அவர்கள், திமுக அரசு மக்களுக்கான அரசாக செயல்படாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின் மகன் மற்றும் மருமகனுக்கான அரசாக மட்டுமே செயல்படுவதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று மக்கள் பயன்பெற உருவாக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டு முகாம்கள் விரைவில் தமிழகமெங்கும் எடுத்துச் செல்லப்படும் என்ற கூறியுள்ளார். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவின் அடுத்த இலக்கு 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தல். இதனை முன்னிட்டு இந்தியாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை சட்டப்பேரவை தேர்தலில் கால் தடம் பதித்துவிட்ட நிலையில், மக்களவை தேர்தலிலும் தடம் பதிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மத்திய அரசின் திட்டங்களை தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க அமைச்சர்களை பிரதமர் மோடி களமிறக்கி விட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Categories

Tech |