பழுதான ரிக் வாகனம் சரி செய்யப்பட்ட நிலையில் குழந்தையை காப்பாற்ற மின்னல் வேகத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.
திருச்சி மணப்பாறை பகுதியை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 30 மணி நேரத்திற்கும் மேல் ஆகியும் மீட்பு குழுவினரால் மீட்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் நெல்லையைச் சேர்ந்த என்எல்சி மற்றும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் ரிக் வாகனத்தின் மூலம் 100 அடிக்கு குழி தோண்டி 80 அடியில் உள்ள குழந்தையை சுரங்கம் அமைத்து மீட்பதற்காக திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதற்கான பணியை தொடங்க ரிக் வாகனம் நடுக்காட்டுபட்டியை நோக்கி வரவழைக்கப்பட்டது. ஆனால் வரும் வழியில் பழுது காரணமாக பாதியிலேயே வாகனம் சாலையின் இடது புறமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின் மெக்கானிக் வரவழைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து வாகனம் சரி பார்க்கப்பட்ட நிலையில் நடுகாட்டுப்பட்டியை நோக்கி குழந்தையை காப்பதற்காக விரைவாகப் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறது.