பாகிஸ்தான் நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் உண்டான கடும் வெள்ளத்தில் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்படைந்திருப்பதாக யுனிசெப் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் சமீப நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, கடும் வெள்ளத்தில் சிக்கி 350 குழந்தைகள் உட்பட 1100 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரில் பரவும் நோய்களாலும், தகுந்த உணவு இல்லாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டும் குழந்தைகள் பாதிப்படைவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜூலை மாதத்தில் ஆரம்பித்த பருவ மழை 3 கோடி மக்களை பாதிப்படைய செய்திருக்கிறது. எனவே, யுனிசெப் மற்றும் அரசு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேர்ந்து குழந்தைகளுக்கான தேவைகளை நிறைவேற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்நாட்டில் தற்போது வரை வெள்ளத்தால், ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதிப்படைந்திருக்கின்றன.
வெள்ளம் அதிகமாக சூழ்ந்திருப்பதால், சுவாசப்பாதை தொற்று, தோல் அரிப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்கள் பரவி வருகிறது. பதிப்படைந்தவர்களில் 40% பேர் குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் மேலும் வெள்ளம் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.
எனவே, உலக சுகாதார மையம் பாதிப்படைந்த இடங்களில், சுகாதார சேவைகள் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நோய் பரவலை கண்டுபிடித்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.