அத்தியாவசியமான வேலைக்கு செல்பவர்களுக்காக சென்னையில் கூடுதலாக 30 பேருந்துகள் என மொத்தமாக 230 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் பச்சை,ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களை அந்தந்த மாநில அரசுகள் தீர்மானித்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பணிகளுக்காக வருபவர்களுக்காக சென்னையில் மட்டும் 200 போக்குவரத்து இயக்கப்பட்டு வருகின்றது.
தலைமைச் செயலக அலுவலர் , மருத்துவர்கள் , செவிலியர்கள் இது மட்டுமின்றி பல்வேறு அத்தியாவசியமான வேலைக்கு செல்வோருக்கு மட்டும் 200 சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மேலும் 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்து கழகம் தகவல் அளித்துள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்கு சென்று வர ஏதுவாக மொத்தம் 230 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என சென்னை மாநகராட்சி போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்காக விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 49 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோவில் , கூடுவாஞ்சேரி , தாம்பரம், பூந்தமல்லி, மணலி ஆகிய பகுதியில் இருந்து 230 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சேவை மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மட்டுமின்றி 50% அரசு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கும் உதவியாக இருக்கும்.