Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் 30% ஓட்டுநர் உரிமங்கள் போலியானவை… மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!!

இந்தியாவில் உள்ள மொத்த ஓட்டுநர் உரிமங்களில்  30% போலியானவை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் மோட்டார் வாகன சட்ட  திருத்தம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியபோது, இந்தியாவில் மட்டும்தான் எளிமையான முறையில் ஓட்டுனர் உரிமத்தை பெற முடியும் என்றும், ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் புகைப்படம் ஓட்டுனருடன் பொருந்துவதில்லை என்றும், அனைவரும் சட்டத்தை மதிக்காமலும் பயமின்றியும் வாகனம் ஓட்டுவதாக தெரிவித்தார்.மேலும்  100 ரூபாய் அபராதம்   குறித்து யாரும்  கவலைப்படுவதில்லை என்றும் விதியை மீறி விட்டு போக்குவரத்து காவலர்களைக் கடந்து செல்கிறார்கள் என்றும் நிதின்  கட்கரி தெரிவித்தார்.

Image result for central minister nitin gadkari

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவில் ஆண்டிற்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர்   விபத்தில் உயிர் இழப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக சட்டத் திருத்தத்தை கொண்டு முடியாமல் தோல்வி அடைந்து வருவதாகவும் , தற்போது இதனை நிறைவேற்றி மக்களின் உயிரை காப்போம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் 3 முதல் 4 சதவீதம் மட்டுமே விபத்துக்கள் குறைந்துள்ளது ஆனால்  தமிழகத்தை பொருத்தவரை 15% விபத்துகள் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர் தமிழ்நாட்டை பின்பற்றி விபத்துகளை குறைக்க முயற்சிகள் மேற்கொள்வோம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |