Categories
சேலம் மாநில செய்திகள்

” காஷ்மீர் விவகாரம்” சேலத்தில் போராட்டம் நடத்திய 30 பேர் கைது..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போர்ராட்டம் நடத்திய 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கக் கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகளும்  தொடர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Image result for சேலத்தில் முற்றுகை போராட்டம்

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மசோதாவிற்கு எதிராக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் காஷ்மீர்  மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆளும் பாஜக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 30க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |