ஆஸ்திரேலியாவிலுள்ள Rottnest என்னும் தீவின் அருகில் கடலில் இறந்த திமிங்கலத்தை உண்பதற்காக சுறா மீன்கள் வட்டமிட்டதால் கடற்கரைகள் அடைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ள Rottnest என்னும் தீவின் அருகில் திமிங்கலம் ஒன்று இறந்து மிதந்துள்ளது. அதை உண்பதற்காக சுமார் 30 சுறா மீன்கள் அதனைச்சுற்றி வட்டமிட்டிருக்கிறது. முதலில் திமிங்கலம் கடற்கரையிலிருந்து, அதிகமான தூரத்தில் தான் கடலில் மிதந்திருக்கிறது.
அதன்பின்பு மக்கள் நடமாடக்கூடிய கடற்கரையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மிதந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அதன் பின்பு கடற்கரையிலிருந்து, 3 கிலோமீட்டர் தொலைவிற்கு அதனை எடுத்துச் சென்று கடலின் நடுப்பகுதியில் போட மீன்வளத்துறை தீர்மானித்துள்ளது.