சர்வதேச அளவில் இன்றைய காலகட்டத்தில் பல தாய்மார்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வருவதால் செயற்கை கருவூட்டல், வாடகைத்தாய் முறை என பல்வேறு விதமான முறைகளை தேர்ந்தெடுத்து குழந்தை பெற்றுக் கொள்ளும் வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். உலக சுகாதார அமைப்பு 3 லட்சம் இறப்புகள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் ஏற்படுகிறது என்று தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது உலகின் முதல் செயற்கை கருப்பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெர்லினைச் சேர்ந்த எக்டோலைஃப் என்ற நிறுவனம் உலகின் முதல் செயற்கை கருப்பையை அறிமுகப்படுத்தியுள்ளது.
தாயின் கருவறையை போன்று செயற்கையாக உருவாக்கப்படும் இந்த கர்ப்பபை மூலம் வருடத்திற்கு 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோவையும் அந்நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத பெற்றோருக்கு கருத்தரிக்கவும், உண்மையான உயிரியல் பெற்றோராக மாறுவதற்கும் இது வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.