கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் 30,000 நகைக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் 80 மாவட்டங்களை மூடக்க வேண்டும் என்ற மத்திய அரசின் பரிந்துரையில் தமிழகத்தின் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் உள்ளடங்கியுள்ளது.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளை தவிர்த்து மற்ற கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள நகை கடைகள் முழுவதும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நகை வணிகர் சங்கத் தலைவர் ஜெயந்திலால் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டதில் தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருவதால் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 30,000 நகைக்கடைகள் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.