இந்தியாவில் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கியதிலிருந்து ஏர்டெல் மற்றும் ஜியோ போன்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை ஒவ்வொரு நகரத்திலும் விரிவாக்கம் செய்து வருகிறது. இதில் ஏர்டெல் நிறுவனமானது இந்தியாவில் சென்னை உட்பட 12 நிறுவனங்களில் 5ஜி சேவையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் 5ஜி நெட்வொர்க் ஆனது 4ஜியை விட 20 முதல் 30 மடங்கு வரை அதிக அளவு ஸ்பீடாக இருக்கும் என்று கூறி ஏர்டெல் நிறுவனம் ஒரு டெமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அதிவேக இன்டர்நெட் வேகத்தின் காரணமாக மிகப்பெரிய வீடியோவை கூட நாம் குறைந்த நேரத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.