Categories
உலக செய்திகள்

30 வருடங்களுக்கு பின்னர் மீட்டெடுக்கப்பட்ட சடலம்…!!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

வடக்கு அயர்லாந்தில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவமனையில் இருந்து மாயமான ஒரு நபரின் சடலத்தை காவல்துறையினர் கவடக்கு அயர்லாண்டறிந்துள்ளனர்.

லண்டன்டெரியில் உள்ள மிட் உல்ஸ்டர் என்ற மருத்துவமனைக்கு கடந்த 1991ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் தேதி ஜேம்ஸ் பேட்டர்சன் (54) சென்றிருந்த போது அங்கு மாயமாகியுள்ளார். அதன் பின்னர் பன் நதியில் அவரின் சடலம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஒரு மர்ம மரணமாக கருதவில்லை என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். சென்ற மாதம் பன் ஆற்றிலிருந்து மீட்கப்பட்ட போர்டு ஒரியன் என்ற காரில் இருந்த இந்த சடலம் மீட்கப்பட்டது. முப்பது வருடங்களுக்குப் பின்னர் தற்போது வரை நீடித்து வரும் அந்த மர்மத்தை இந்த கார் தீர்த்து வைக்கும் என காவல்துறையினர் நம்புகின்றனர்.

கடந்த 1999ஆம் ஆண்டு மருத்துவமனைக்கு தனது நண்பரை பார்வையிடச் சென்ற ஜேம்ஸ், ஒரு தடயமும் இல்லாமல் மாயமாகியுள்ளார். அவர் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை காலை தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அவரின் குடும்பத்தினர் உண்மையை கண்டறிவதற்கு தற்போது வரை போராடி வருகின்றனர். ஆனால் துரதிஷ்டவசமாக அவரின் உடன் பிறந்த ஏழு நபர்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் இறந்து விட்டனர் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த மர்மமான மரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |