மனைவி ஒருவர் தனது கணவர் இறந்ததை நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல் இருந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் வசித்து வருபவர் மதன்குமார். இவர் மனைவியுடன் தன்னுடைய குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சுகன்யா வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ரிஷிதா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று மாலை வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த காரில் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்து மது குடித்துள்ளார். அப்போது நீண்ட நேரமாக மதன்குமார் வீட்டுக்கு திரும்பவில்லை என்பதால் அவருடைய தாயார் லதா மகனை தேடி சென்றுள்ளார்.
அப்போது மதன் காருக்குள் மயங்கி நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார் கண்ணாடியை உடைத்து திறந்துள்ளனர். இதையடுத்து ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மதன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து தனது கணவரின் உடலை பார்த்த அவருடைய மனைவி சுகன்யா தன் கணவர் இறந்து விட்டார் என்பதை கூட நம்ப முடியாமல் பித்து பிடித்தது போல் இருந்துள்ளார்.
இந்த நிகழ்வை பார்த்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பரமக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் காரினுள் உள்ள ஏசியில் வாயு கசிவு காரணமாக இறந்தாரா? அல்லது நெஞ்சுவலியா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.