தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இரண்டாம் பாடல் டிசம்பர் 4-ம் தேதி மாலை 4மணிக்கு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.
அதன் பிறகு நடிகர் விஜய் சினிமாவில் அடி எடுத்து வைத்து 30 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் அதை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் பாடலாசிரியர் விவேக் ஒரு டுவிட்டர் பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். அதில் 30 வருட முயற்சி, வியர்வை நெஞ்சினுள் உள் அறைகளில் உரம் போட்டு வளர்த்த தீ. இட்ஸ் டைம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
முப்பது வருட முயற்சி, வியர்வை, நெஞ்சின் உள் அறைகளில் உரம் போட்டு வளர்த்த ‘தீ’
‘Its time _________’ pic.twitter.com/uwV6Yz4af2
— Vivek (@Lyricist_Vivek) December 2, 2022