இந்திய ராணுவ வீரர் அவினாஷ் 30 வருட சாதனையைை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள மண்ட்வா கிராமத்தைச் சேர்ந்தவர் அவினாஷ் சேபிள். இவர் தனது பள்ளிப் படிப்பிற்குப் பிறகு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு ஸ்டீபிள் சேஸ் பயிற்சியில் தொடங்கினார்.
இதற்கிடையில் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்தில் 8.29.80 என்ற நேரத்தில் முறியடித்து தனது முதல் தேசிய சாதனையை படைத்தார். இதுு மட்டுமின்றி அவினாஷ் இதுவரை 7 சர்வதேச சாதனைகளை படைத்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் சான் ஜுவான் கேபிஸ்டிரேனோ நகரில் நடந்த 5000 மீ ஸ்டீபிள் சேஸ் போட்டியில் 13:25.65 நிமிடங்களில் இலக்கை கடந்து புதிய சாதனை படைத்து 30 ஆண்டு கால தேசிய சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 1992 ஆம் ஆண்டுு பகதூர் பிரசாத் என்ற வீரர் 13:29.70 நிமிடங்களில் ஓடியதே முந்தைய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.